கன்னியாகுமரி : ஐடிஐ மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு குறித்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே வெளியிட்ட அறிக்கையில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் காலியாக உள்ள இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நவம்பர் 12ஆம் தேதி தொடங்கி, 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்காக, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தரவரிசை பட்டியல் 15 ஆம் தேதி வெளியிடப்படும். மாணவர்கள் விருப்பமான தொழில் பயிற்சி நிலையங்களில் காலியாகவுள்ள தொழில் பிரிவை 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் இணையதளம் வாயிலாக தேர்வு செய்யலாம்.