தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகர்கோவிலில் குடிநீர் பிரச்னை 2 நாட்களுக்குள் தீர்க்கப்படும் - தளவாய்சுந்தரம்! - நாகர்கோவில்

கன்னியாகுமரி: நாகர்கோவில் மாநகர குடிநீர் பிரச்னைக்கு இன்னும் 2 நாட்களில் தீர்வு காணப்படும் என்று தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தெரிவித்துள்ளார்.

தளவாய்சுந்தரம்

By

Published : Jun 20, 2019, 7:21 AM IST

இது குறித்து நாகர்கோவிலில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னை தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி கடந்த 2 நாட்களாக மாவட்ட வாரியாக ஆலோசனை நடத்தினார். குடிநீர் பிரச்னை குறித்து கண்காணிப்புக் குழுக்களை அமைத்துள்ளார். அதேபோல் உள்ளாட்சித் துறை அமைச்சர் மாநிலம் முழுவதும் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர்களுக்கு உரிய உத்தரவுகளை அளித்துள்ளார். எங்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிப்பது, அல்லது ஆங்காங்கே இருக்கக் கூடிய போர்வெல் மூலம் குடிநீர் விநியோகிப்பது உள்ளிட்ட வழிகளை மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

தளவாய்சுந்தரம்

குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை பருவமழை தொடங்கிவிட்டது. நாகர்கோவில் மாநகராட்சியைப் பொறுத்தவரை மாநகராட்சி எல்லைக்குள் 83 ஆயிரம் வீடுகள் உள்ளன. இன்னும் 6 மாதங்களுக்குள் அம்ருத் திட்டத்தின் கீழ் 250 கோடி மதிப்பில் புத்தன் அணையிலிருந்து கிருஷ்ணன்கோவில் நீரேற்று நிலையத்துக்குத் தண்ணீர் கொண்டு வரப்படும். தற்போது 11 மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் உள்ளன. புதிய திட்டத்தின் கீழ் மேலும் 11 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டப்படும். இன்னும் 2 நாட்களுக்குள் குடிநீர் பிரச்னைக்கு முழுமையான தீர்வு காணப்படும்" என்றார்

ABOUT THE AUTHOR

...view details