தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐம்பொன் சிலை திருட்டு! - ஐம்பொன் சிலை திருட்டு

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே சாஸ்தா கோயிலில் இரண்டு அடி உயர ஐம்பொன் சிலை, உண்டியல் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வடசேரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஐம்பொன் சிலை திருட்டு!
ஐம்பொன் சிலை திருட்டு!

By

Published : Dec 10, 2020, 6:11 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புத்தேரி குளக்கரை அருகே சுயம்பு லிங்கம் செல்லம் சாஸ்தா கோயில் அமைந்துள்ளது. சுமார் 100 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இந்தக் கோயிலில் தினசரி ஒரு வேளை பூஜை நடைபெற்றுவருகிறது.

நேற்று வழக்கம்போல், பூஜை செய்துவிட்டு கோயிலைப் பூட்டிச்சென்ற கோயில் பூசாரி, மீண்டும் கோயில் நடையைத் திறந்தபோது கோயிலின் வாசலில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து, கோயிலின் உள்ளே சென்று பார்த்தபோது கோயிலிலிருந்து ஐம்பொன் சிலை, உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து நாகர்கோவில் வடசேரி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: பாபநாசம் கோயிலில் காணாமல் போன 25 பவுன் நகைகள் மீட்பு

ABOUT THE AUTHOR

...view details