அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த் இன்று (டிசம்பர் 12) மரியாதை நிமித்தமாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து பேசினார். மறைந்த முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் நிறைவேற்றப்படாதக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினார்.
’எனது தந்தையின் கனவை நிறைவேற்ற பாடுபடுவேன்’ - நடிகர் விஜய் வசந்த் உறுதி - i will work for my dad's dream
கன்னியாகுமரி: மறைந்த முன்னாள் நாடளுமன்ற உறுப்பினரும், தனது தந்தையுமான வசந்தகுமாரின் கனவை நிறைவேற்ற பாடுபடுவேன் என நடிகர் விஜய் வசந்த் உறுதியளித்துள்ளார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மாவட்ட ஆட்சியரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். வெட்டூர்ணி மடம் உள்ள காமராஜர் சிலையை புதுப்பிக்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தேன். அந்த பணிகள் குறித்து அவரிடம் கேட்டறிந்தேன்.
குமரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை கொண்டுவர வேண்டும் என்பது எனது தந்தையின் கனவாக இருந்தது. எனது தந்தையின் கனவுகளை நிறைவேற்ற பாடுபடுவேன். தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நமது கூட்டணி வலுவான கூட்டணி. நான்கு மாதங்களில் தமிழ்நாடு அரசியலில் மாற்றம் வர இருக்கிறது. இந்த மாற்றம் மட்டுமே நிரந்தரமானது” என்றார்.