தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நீங்கள் தொடர்புகொண்ட நபர் வேறு ஒருவரிடம் பேசிக்கொண்டு இருக்கிறார்'- செல்போன் பிஸியால் வந்த வினை! - The husband who killed his wife

மனைவியின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது "வேறு ஒரு நபருடன் தொடர்பில் உள்ளார்" என வந்த பிஸி டோன் குரலால், மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை கழுத்தை அறுத்துக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செல்போன் பிஸி
செல்போன் பிஸி

By

Published : Sep 28, 2021, 3:18 PM IST

Updated : Sep 28, 2021, 5:26 PM IST

கன்னியாகுமரி: கன்னியாகுமரி வெள்ளிச்சந்தை பகுதியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் - உமா தம்பதியர். இவர்களுக்கு ஒரு மகன், மகள் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் உமா டெய்லரிங் படித்திருப்பதால், வீட்டிலேயே தனக்கு தெரிந்த நபர்களுக்கு துணி தைத்து கொடுத்து வந்துள்ளார்.

இதனால் வீட்டிற்கு அடிக்கடி வெளி நபர்கள் வந்து சென்றதால், மனைவியின் நடத்தை மீது ரமேஷுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உமா தனது தாய் வீட்டிற்கு சென்று டெய்லரிங் பணியைத் தொடங்கியுள்ளார். அப்போது உமா வாடிக்கையாளர் ஒருவருடன் செல்போனில் பேசும் அதே நேரத்தில் ரமேஷும் உமாவைத் தொடர்புகொண்டுள்ளார்.

கத்தியால் கழுத்தை அறுத்த கணவன்

அந்தச் சூழலில் வாடிக்கையாளர் "வேறு ஒரு நபரிடம் தொடர்பில் உள்ளார்" என செல்போன் சர்வரால் கூறப்படும் குரல் பதிவினை உண்மை என நம்பி, உடனடியாக வீட்டிற்கு வந்து, ''நீ யாருடன் தொடர்பில் இருக்கிறாய்'' எனக் கேட்டு ரமேஷ் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் ஏற்கெனவே தயார் செய்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனது தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் கழுத்தைக் சரமாரியாக அறுத்துள்ளார். இதில் படுகாயமடைந்த உமா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:செய்தியாளர் வீட்டில் 15 பவுன் தங்க நகைகள், ரூ. 60 ஆயிரம் கொள்ளை

Last Updated : Sep 28, 2021, 5:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details