கன்னியாகுமரி:திருமணமாகி 8 மாதங்களே ஆனநிலையில் மனைவியை கொலை செய்த கணவன் வீட்டின் முன்பு மனைவியின் உடலை பெற்றோர் மற்றும் உறவினர்கள் புதைத்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம்கருங்கல் அருகே உள்ள பள்ளியாடி பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன் கட்டிட ஒப்பந்தக்காரராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் ஜெனிலா ஜோபி (23). கருங்கல் திப்பிரமலை பகுதியை சேர்ந்த சேம் மரியதாஸ் என்பவருக்கும் ஜெனிலா ஜோபிக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
சேம் மரியதாஸ் பெங்களூருரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆடம்பரமாக நடைபெற்ற திருமணத்திற்குப் பின்னர் ஜெனிலா ஜோபி கணவருடன் பெங்களூருவில் கணவரது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். புதுமண தம்பதியர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 11-ந் தேதி இரவு ஜெனிலா ஜோபிக்கும் கணவர் சேம் மரியதாசுக்கும் வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது.
பின்னர் ஜெனிலா ஜோபி படுக்கை அறையில் தூங்கச் சென்றுள்ளார். நள்ளிரவில் ஜெனிலா ஜோபி தூங்கிக் கொண்டிருந்த போது கணவர் சேம் மரியதாஸ் தனது இளம் மனைவியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்து உள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கர்நாடக மாநிலம் தொட்டாபள்ளபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து சேம் மரியதாசை கைது செய்ததுடன்
ஜெனிலா கோபியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.