பெருகி வரும் வேலையில்லா திண்டாட்டத்தை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும் வேலைவாய்ப்பை ஏற்படுத்த வலியுறுத்தியும் குமரி மாவட்டம் நாகர்கோவிலிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே காங்கிரஸ் இளைஞரணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில், காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய வசந்தகுமார், பிரதமர் மோடி ஆட்சிக்கு வரும் முன்னரே ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவோம் என்று கூறினார். ஆறு ஆண்டுகளாக 12 கோடி பேரில் ஒருவருக்குக்கூட இதுவரை வேலை வழங்கவில்லை. மேலும், இட ஒதுக்கீடுகள் வழங்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டினார்.