தமிழ்நாடு

tamil nadu

கல்லூரி மாணவிகளுக்கு மனித உரிமைகள் குறித்த கருத்தரங்கம்

By

Published : Dec 11, 2019, 8:20 AM IST

கன்னியாகுமரி: சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் மனித உரிமைகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

kaniyakumari
kaniyakumari

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் மனித உரிமைகள் குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. கருத்தரங்கில் மாவட்ட லோக் அதாலத் நீதிபதி மகிழேந்தி, காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹர் கல்லூரி மாணவிகளுக்கு காவலன் செயலியை நீதிபதி முன்னிலையில் பயன்படுத்திக் காட்டினார். செயலியை இயக்கிய ஏழாவது நிமிடமே, அந்த இடத்திற்கு காவல்துறையினர் வந்தனர். பின்னர் அவர், காவலன் செயலி பெண்களுக்கு அவசியமான ஒன்று, அனைத்து பெண்களும் இச்செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

மனித உரிமைகள் குறித்த கருத்தரங்கம்

கருத்தரங்கம் குறித்து பேசிய நீதிபதி மகிழேந்தி, பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் குறித்தும், அதற்கான தடுப்புச் சட்டங்கள் குறித்தும் விளக்கினார். மேலும், பெண்கள் அச்சத்தை விட்டு வாழ்வில் முன்னேர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: 'பட்டனை அழுத்தினால் காப்பாற்ற போலீஸ் வரும்'

ABOUT THE AUTHOR

...view details