கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகம் அருகில் பிரபல தனியார் உணவகம் உள்ளது. இன்று (ஆக. 25) மதியம் பெண் ஒருவர் இந்த உணவகத்திற்கு சாப்பிட வந்துள்ளார். அப்பொழுது உணவக ஊழியர்கள் குளிர்சாதன இயந்திரத்தை இயக்கியுள்ளனர்.
உடனே அதிலிருந்து புகை வர ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அப்பெண்ணை அங்கிருந்து வெளியேற்றினர். ஆனால், குளிர்சாதன இயந்திரத்தில் மின்கசிவு ஏற்பட்டு தீயானது உணவகம் முழுவதும் பரவியது.
இதுகுறித்து ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் இரண்டு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், உணவகத்தில் இருந்த நான்கு எரிவாயு சிலிண்டர்களையும் வெளியே கொண்டு வந்தனர்.
தனியார் உணவகத்தில் தீ விபத்து பின்னர் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயைஅணைத்தனர். உணவகத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. தீ விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குப்பைக் கிடங்கில் தீ விபத்து - பொதுமக்கள் அவதி