தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் மீது வழக்குப்பதிவு - Hindu Religious Charitable Endowments Department

கன்னியாகுமரி: அதிமுக ஆட்சி காலத்தில் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் அன்புமணி மீது கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் மீது வழக்குப்பதிவு
இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் மீது வழக்குப்பதிவு

By

Published : Jul 9, 2021, 9:42 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து அறநிலையத் துறையில் 2017 முதல் 2019ஆம் ஆண்டுவரை இணை ஆணையராக பணியில் இருந்த அன்புமணி என்பவர் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

அதனடிப்படையில் விசாரணை நடத்திய கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் பணி காலத்தில் அவர் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததை கண்டுபிடித்தனர்.

அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் ரமா கொடுத்த புகாரின் அடிப்படையில், இரண்டு ஆண்டுகளில் அளவுக்கு அதிகமாக 41 லட்ச ரூபாய் சொத்து சேர்த்ததாக அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அன்புமணியை கைது செய்து விசாரித்தால் ஊழல் செய்த ஊழியர்கள், அரசியல் புள்ளிகள் சிக்குவார்கள் என கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் இந்து அறநிலையத் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details