நாடெங்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகின்றன. அதேபோல், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஆதரவு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் குமரி மாவட்டம் தக்கலை தாலுகா அலுவலகம் முன்பாக, இந்து முன்னணி அமைப்பினர் நாமஜெப ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை தொடங்கி மாலை வரையிலும் நடைபெற்றது. இதில், ஏராளமான இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர்.