கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர். இந்நிலையில் பொங்கலை பண்டிகையை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா இன்று கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு சமத்துவ பொங்கல் வைத்து பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.