கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடு- கேரள எல்லைப்பகுதியான களியக்காவிளை பேரூராட்சிக்கு சொந்தமான காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் வாகனங்களுக்கு வாடகை மற்றும் தீர்வை வரி வசூலிக்க பந்தாலு மூட்டை சேர்ந்த சதிஷ்குமார் என்பவர் ஒப்பந்தம் செய்துள்ளார்.
ஆனால், அரசு அனுமதித்ததை விட அதிகமாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடமிருந்து கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், ராஜசேகர் என்பவருக்கு விற்பனை செய்ய வாழைதாறுகளை ஏற்றி வந்த மினி டெம்போவிற்கு 150 ரூபாய் அரசு கட்டணம் விதித்திருந்த நிலையில், நானூறு ரூபாய் கேட்டதாக தெரிகிறது. பணத்தை பெற்று ரசீது கொடுக்காததால் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு சென்றுள்ளனர்.