ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. அலைகள் வானுயரத்திற்கு மேல் எழுந்து, சூறைக்காற்று வீசுவதால் சாலைகளின் இருபுறங்களிலும் உள்ள மணல்கள் சாலையை மூடியுள்ளன.
தனுஷ்கொடியில் கடல் சீற்றம் - ரயில் சேவை பாதிப்பு - கடல் சீற்றம்
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
இதனால், பாம்பன் மற்றும் மண்டபம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லத் தடை விதித்து மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
ராமேஸ்வரம் பகுதி முழுவதும் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுவதால், பாம்பன் பாலத்தை ரயில்கள் கடப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.