குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளிலும், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென் தமிழகப் பகுதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று இந்திய கடல் தகவல்கள் சேவை மையம் அறிவித்துள்ளது. குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான தென் தமிழக கடல் பகுதியில் இன்று 3.5 மீட்டர் முதல் 3.8 மீட்டர் உயரத்துக்கு பேரலைகள் எழ வாய்ப்புள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது.
'மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம்' என எச்சரிக்கை!
கன்னியாகுமரி: தென் தமிழக கடல் பகுதியில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று இந்திய கடல் தகவல்கள் சேவை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி
தென்மேற்கு, மேற்கு மத்திய அரபிக்கடல் பகுதியில், தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும், நாளையும் நாளை மறுநாளும் (ஜூன் 25, 26) மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் கடல் தகவல்கள் சேவை மையம் தெரிவித்துள்ளது. எனவே, மீனவர்கள் தென்மேற்கு, மேற்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.