குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் பொதுமக்களை வாட்டி வந்த நிலையில், வெப்பத்தை தணித்து குமரியை குளிர்விக்கும் விதமாக இன்று பிற்பகலில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது.
குறிப்பாக நாகர்கோவில், வடசேரி, ஒழுகினசேரி, கோட்டாறு உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரம் பெய்த மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.