தமிழ்நாடு, கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் தென் மேற்கு பருவமழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு உரிய நேரத்தில் பருவமழை பெய்யாததால் விவாசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.
கன்னியாகுமரியில் இரவு முழுவதும் கனமழை
கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், சுசீந்தரம் உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்தது. அதிகபட்சமாக கொட்டாரம் பகுதியில் 62.4 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இதனால் பேச்சிபாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு 394 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அதேபோல 627 கன அடி தண்ணீர் அணையில் இருந்து விவசாயத்துக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது.