இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் குறிப்பிட்ட சதவிகிதத்திலான குழந்தைகள் செவித்திறன் குறைபாட்டுடன் பிறக்கின்றனர். இந்தக் குழந்தைகளுக்கு ஆறு வயதுக்குள் அறுவை சிகிச்சை அளித்து பின் தொடர் சிகிச்சை அவசியமாகிறது. இதற்காக புனேவில் நான்கு கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவமனை அமையவுள்ளது.
செவித்திறன் குறைப்பாடுள்ள குழந்தைகளுக்கு நிதி திரட்ட ஆட்டோ பேரணி - கன்னியாகுமரி
கன்னியாகுமரி: செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நிதி திரட்டும் நோக்கில் ஆட்டோ விழிப்புணர்வு பேரணி குமரியிலிருந்து குஜராத்திற்கு தொடங்கியது.
இதனிடையே, சக்சம் அமைப்பினர் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நிதி திரட்ட விழிப்புணர்வு ஆட்டோ பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த ஆட்டோ விழிப்புணர்வு பேரணி தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மஹாராஷ்டிரா வழியாக சென்று டிசம்பர் 21ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நிறைவடைகிறது.
30 ஆட்டோகள் கலந்துகொள்ளும் இந்தப் பேரணியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 26 பெண்கள் உட்பட 90க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்கின்றனர். இந்தப் பேரணியை வெள்ளிமலை விவேகானந்த ஆசிரம தலைவர் சாமி சைதன்யானந்தஜி மகாராஜ் ஆசியுரை வழங்கி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.