கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் 9 நாள்கள் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்க பாரம்பரிய முறைபடி கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சுசீந்திரம் நங்கை அம்மன், வேளிமலை குமாரசுவாமி, பத்பநாபபபுரம் தேவாரகட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் உடைவாளுடன் திருவனந்தபுரத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லபடுவது வழக்கம்.
இந்த சிலைகளுக்கு அங்கு பூஜை நடத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படும். இந்தாண்டு செப்.26ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நவராத்திரிவிழா தொடங்குகிறது. அந்த வகையில் பத்பநாபபுரம் அரண்மனையின் தேவாரகட்டு சரஸ்வதி அம்மன் ஆலயத்திலிருந்து, சரஸ்வதி அம்மன் யானை மீதும், வேளிமலை குமாரசுவாமி மற்றும் முன்னுதித்த நங்கையம்மன் சிலைகள் பல்லக்கிலும் பத்பநாபபுரம் அரண்மனையிலிருந்து நேற்று (செப்.23) ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன.