கன்னியாகுமரி:கணினியை ஹேக் செய்து டாலரில் பணம் கேட்டு மிரட்டும் நபர்களிடமிருந்து, ஆவணங்களை மீட்டுத் தருமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கடுக்கரை பகுதியைச் சேர்ந்தவர் முரளி கிருஷ்ண சிவன் பிள்ளை. இவர் அப்பகுதியில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் நடத்திவந்தார்.
பொதுமக்களின் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, இ கிசான் உழவர் அட்டை உள்ளிட்டவற்றில் திருத்தம் செய்யும் பணிகளை அவர் மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 3ஆம் தேதி இவரது கணினி ஹேக் செய்யப்பட்டு சேமித்து வைக்கப்பட்டிருந்த ஆதார் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன. திருடப்பட்ட ஆவணங்களை திரும்பப் பெற பணம் கேட்டு மிரட்டுவதாகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.