ஹரியானாவைச் சேர்ந்தவர் லெப்டினென்ட் கர்னல் பாரத் பன்னு (36). இவர் தற்போது பெங்களூருவில் ராணுவ அலுவலராகப் பணிபுரிந்துவருகிறார். சைக்கிள் ஓட்டுவதில் வல்லவரான இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் தனது நண்பர்களான டாக்டர் ஆர்த்தி நாக்ராணி, கதா சோனானிஸ்கர், ஜோதி திருப்பத்தி, சுசன்த் ஜாதவ், அர்ஹம் சேக், அப்துல் அஹத் சேக், விஷால் நாக்ராணி, அஜய் பக்க்ஷி ஆகியோரின் துணையுடன் கடந்த 21ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரிலிருந்து சைக்கிள் பயணத்தைத் தொடங்கினார்.
இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா வழியாக தமிழ்நாடு கன்னியாகுமரியை வந்தடைந்தார். சுமார் 3604 கிலோ மீட்டர் தூரத்தை 8 நாட்கள் 9 மணிநேரம் 47 நிமிடங்களில் கடந்து கின்னஸ் சாதனை முயற்சி செய்துள்ளார்.