தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கன்னியாகுமரியில் இலவச மருத்துவ முகாம் - தேசிய ஊரக சுகாதார இயக்கம்

கன்னியாகுமரி: தேசிய ஊரக சுகாதார இயக்கம் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகுமார் எம்பி குத்துவிளக்கேற்றும் காட்சி
நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகுமார் எம்பி குத்துவிளக்கேற்றும் காட்சி

By

Published : Mar 8, 2020, 12:45 PM IST

கன்னியாகுமரியில், பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை மற்றும் தேசிய ஊரக சுகாதார இயக்கம் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம், சந்தையடி பெருந்தலைவர் காமராஜர் சமூக கூடத்தில் நடைபெற்றது.

இம்முகாமிற்கு, அகஸ்தீஸ்வரம் முன்னாள் பேரூராட்சி தலைவர் சந்தையடி பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இந்த மருத்துவ முகாமை நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகுமார் எம்பி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்

இம்மருத்துவ முகாமில் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்திற்குள்பட்ட பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பயன்பெறும் வகையில் அதிநவீன மருத்துவ உபகரணங்களைக் கொண்டு, மருத்துவ பரிசோதனைகளும் சிகிச்சையும் அளிக்கப்பட்டன.

மேலும், முகாமில் மகளிர், மகப்பேறு, சிசு, குழந்தைகள் என அனைவருக்கும் சித்த மருத்துவம், பொது மருத்துவம் மற்றும் அனைத்து வகையான சிகிச்சை முறைகளும் அளிக்கப்பட்டன. முகாமில் ஏராளமான மருத்துவர்கள் கலந்துகொண்டு, மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தனர்.

இம்முகாமில், ஏராளமான நோயாளிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர். இதில், கொரானோ நோய் பரவும் முறை குறித்தும், இது மாதிரியான தொற்று நோய்களிலிருந்து தங்களை எவ்வாறு காப்பாற்றிக்கொள்வது போன்ற விழிப்புணர்வு கருத்துகளும் நடைபெற்றது.

இதையும் படிங்க:ஆதரவற்ற முதியோருக்கு அன்புச் சேவை புரியும் பாக்கியரதி ராமமூர்த்தி!

ABOUT THE AUTHOR

...view details