தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேலிடத்திலிருந்து தகவல் வரவில்லை, இங்கிருந்து செல்லமாட்டோம்- காவலர்களிடம் தில் காட்டிய அரசு ஊழியர்கள்! - ஆர்ப்பாட்டம் நடத்திய அரசு ஊழியர்கள்

கன்னியாகுமரி: காவலர்கள் விடுவித்தும் அரசு ஊழியர்கள் அங்கிருந்து செல்ல மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களை விடுவித்த காவல் துறை
போராட்டக்காரர்களை விடுவித்த காவல் துறை

By

Published : Feb 3, 2021, 4:41 PM IST

நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்ந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ராமன்புதூர் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று (பிப்.02) இரவு 8 மணியளவில் இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு வீடு செல்ல காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டனர். ஆனால், அரசு ஊழியர்கள் யாரும் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து திருமண மண்டபத்தில் தங்கினர். இதனால், காவல் துறையினர் அவர்களை அங்கிருந்து செல்ல வலியுறுத்தினர்.

அப்போது அரசு ஊழியர்கள் தங்களுக்கு மேலிடத்திலிருந்து தகவல் வரவில்லை. அதனால், எங்களுக்குத் தகவல் வரும் வரை நாங்கள் இங்கே தான் இருப்போம் என்று கூறியுள்ளனர். டவுன் டிஎஸ்பி வேணுகோபால் தலைமையில் காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை கேட்காமல் அரசு ஊழியர்கள் தொடர்ந்து திருமண மண்டபத்தில் தங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்களுக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details