கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதியில் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள், பவர்ஹவுசில் பணிபுரியும் மின்வாரிய ஊழியர்கள், ஆதிவாசி பழங்குடியின மக்கள் ஆகியோரின் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து கோதையாயாறுக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த பேருந்து பவர்ஹவுஸ் அருகே உள்ள இறக்கத்தில் இன்று (ஆக. 16) வந்து கொண்டிருந்தபோது, திடீரென கட்டுபாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், அந்த பகுதியில் மரம் நின்ற காரணத்தாலும், ஓட்டுநரின் துரித நடவடிக்கையாலும் மலையில் இருந்து சுமார் ஐம்பதடி பள்ளத்தில் கவிழாமல் தப்பித்தது.