கன்னியாகுமாரி மாவட்டம் தோவாளை மலர் சந்தை, தமிழ்நாடு மட்டுமல்லாது உலகளவில் புகழ்பெற்றதாகும். இங்கு மதுரை, நெல்லை, திண்டுக்கல், ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தினம்தோறும் பூக்கள் வரத்து இருக்கும். அதேபோல் தோவாளை மலர் சந்தையிலிருந்து கேரளா மாநிலம், வளைகுடா நாடுகள் போன்ற நாடுகளுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இதனால் தோவாளை மலர் சந்தையில் பூக்கள் ஏற்றுமதி, இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் சராசரியாக 8 டன் பூக்கள் வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது மூன்று டன் பூக்களே வருகிறது என வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.