தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆயிரம் இலைகள் இருக்கலாம்..ஆனால் மரம் (இந்தியா) ஒன்றுதான்... - ஆளுநர் ஆர்.என்.ரவி - kanniyakumari day celebration

இந்தியாவில் பல மொழி மற்றும் கலாச்சாரம் இருக்கலாம். ஆனால் வேற்றுமை என்பது மரத்தின் இலைகள் போன்றது ஆயிரக்கணக்கில் இருக்கலாம். ஆனால் மரம்(இந்தியா) என்பது ஒன்று தான் என ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

By

Published : Nov 2, 2022, 10:14 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழ்நாட்டுடன் இணைந்த தினத்தை கொண்டாடும் வகையில் நாகர்கோவில் அருகே இறைச்சகுளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் பாரதி இதிகாச சங்கலன சமிதி அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அப்போது பேசிய அவர்,

“மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து பல பகுதிகள் பிரிந்து சென்ற நிலையில் கேரளாவில் இருந்து தமிழ் மொழி பேசும் மக்கள் தமிழ்நாட்டோடு இணைந்ததை நினைவு கூறும் வகையில் குமரி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் சர்தார் வல்லபாய் படேல் அவர்களை நான் நினைவு கூற கடமை பட்டுள்ளேன்.

இந்நாளை நாம் திருவிழாவாக கொண்டாட வேண்டும். இந்த நாளில் நமக்காக பாடு பட்ட மக்களை நாம் எண்ணி பார்க்க வேண்டும், சுதந்திர போரில் இரத்தம் சிந்திய மக்களை எண்ணி பார்த்து நீண்ட நெடிய வரலாறு கொண்ட இந்திய மக்கள் நாம் அனைவரும் பெருமை பட வேண்டும்.

ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

குமரி மாவட்டம் ஒரு புண்ணிய பூமி, ஆதி பராசக்தி தோன்றிய பூமி, பரத மாதாவின் துவக்கம் இங்கிருந்து துவங்குகிறது. எதற்காக நாம் இந்திய வரலாற்றை எழுத வேண்டும் என சிந்தியுங்கள். வெளிநாட்டவர் உருவாக்கிய வழியில் படித்தோம் அதில் இந்திய வரலாறு மறைக்கப்பட்டு உள்ளது மாற்றப்பட்டு உள்ளது.இதனை நாம் மீட்டெடுக்க வேண்டும்.

காந்தி அடிகள் கூறியதை மறக்க கூடாது, ”வெள்ளை காரர்கள் வெளியே சென்று இருக்கலாம் ஆனால் அவர்கள் நம் எண்ணத்தில் இருந்து மறைய 100 ஆண்டுகளாவது ஆகும்” என தெரிவித்தார். இந்தியாவை உலக நாடுகள் உன்னிப்பாக பார்த்து வருகிறது. 2047ல் நாம் வளர்ச்சி அடைந்து விடுவோம் என பிரதமர் கூறியுள்ளார்.

இந்தியாவில் பல மொழி மற்றும் கலாச்சாரம் உள்ளது, ஆனால் வேற்றுமை என்பது மரத்தின் இலைகள் போன்றது. ஆயிரக்கணக்கில் இருக்கலாம். ஆனால் மரம் என்பது ஒன்று தான், அது போல் தான் இந்தியாவும் ஒன்று. நமது மக்கள் மீதும் இளைஞர்கள் மீதும் நம்பிக்கை உள்ளது. அவர்களால் இந்தியா நிச்சயம் உன்னத நிலை அடையும் என் கூறினார்.

இதையும் படிங்க:பெண்களை இழிவாக பேசக்கூடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு என்ன பிரச்சனை? - அண்ணாமலை

ABOUT THE AUTHOR

...view details