கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த பெண் பக்தர்கள் இருமுடி கட்டுடன் வந்து அம்மனை தரிசித்துச் செல்வது வழக்கம்.
இதனால் இக்கோயில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாள்கள் நடைபெறும் மாசிக்கொடை விழா இன்று தொடங்கியது. தமிழ்நாடு, கேரளாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடியேற்றத்தில் கலந்துகொண்டனர்.
பத்தாவது நாள் நள்ளிரவு ஒடுக்கு பூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது. பக்தர்கள் பாதுகாப்பிற்காக குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.