கன்னியாகுமரி:தமிழ்நாட்டின் கிழக்கு ஆழ்கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்க காலம் என வரையறுக்கபட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரை 61 நாள்கள் மீன் பிடி தடைகாலம் அமுல்படுதப்பட்டு தற்போது கிழக்கு கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர்.
மேற்கு கடல் பகுதிகளான கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் முதல் கேரளா உள்பட குஜராத் வரை உள்ள அரபிக் கடல் பகுதிகளில் மீன் பிடி தடைகாலம் கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி தொடங்கியது. 61 நாள்கள் நடைபெரும் இந்த மீன்பிடி தடைக்காலம் வரும் ஜூலை வரும் 31ஆம் தேதி முடிவடைகிறது.
எனவே அரபிக் கடலில் வரை 1ஆம் தேதி முதல் மீன் பிடிக்க செல்வதற்கு மீனவர்கள் தயாராகி வருகின்றனர். தடை காலம் முடிய இன்னும் ஆறு நாள்களே இருக்கும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் மீன்வலைகளை பழுது பார்ப்ப பணிகள் புதிய வலைகள் பின்னுதல், எஞ்சின் பழுது பார்ப்பு, படகுகளுக்கு வர்ணம் பூசுதல் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பழுது பார்ப்பு பணிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் போதிய இட வசதி இல்லாததால் 70 படகுகள் மட்டுமே இங்கு நிறுத்தபட்டு உள்ளன. மீதமுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் கேரள மாநிலத்தில் பல்வேறு துறைமுகங்கள் நிறுத்தபட்டு அங்கு பழுது பார்ப்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.