கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அமைந்துள்ள சொத்தவிளை கிராமத்தில் வசிக்கும் கண்ணன், சாந்தி தம்பதியின் மூத்த மகள் யூதிஷா. இவர், அப்பகுதியிலுள்ள அரசு பள்ளியில் 8 வகுப்பு படித்து வருகிறார்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து அன்றாட வேலைகளுக்கு நடுவில் அரசு பள்ளியில் படித்தாலும், மாணவி யூதிஷா தனது தனித் திறமையிலும் கவனம் செலுத்தி வந்தார். இதற்கு அவரது ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பை நல்கியுள்ளனர். இவரது எண்ணத்தை அரசு பள்ளி தலைமை ஆசிரியை அகிலாவிடம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே யுதிஷா 230 திருக்குறள்களையும் குறைந்த நேரத்தில் சொல்லும் தனி திறமை படைத்தவர் என்பதை தெரிந்து வைத்து இருந்த அவர், யூதிஷாவை ஊக்கப்படுத்தினார்.
திருக்குறள்களை ஒப்புவித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மாணவி அதன்படி, யுதிஷா மூன்று நிமிடம் 23 நொடிகளில் 230 திருக்குறள்களை ஒப்புவித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். அவருக்கு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'மினி சாதனையாளன் டெனி' - அடுத்த இலக்கு கின்னஸ்..!