கரோனா: குமரியில் அரசு அலுவலகங்கள் மூடல்! - கரோனா நோய் தொற்று காரணமாக அரசு அலுவலர்கள் மூடல்
கன்னியாகுமரி: அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. நாகர்கோவிலில் அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மறுநில அளவை அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் உள்ள அலுவலர்கள், பணியாளர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமான சம்பந்தபேபட்ட அலுவலகங்கள் மூடப்பட்டன.
மாவட்டத்தில் இதுவரை ஏழாயிரத்து 843 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆறாயிரத்து 596 பேர் பூரண குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் ஆயிரத்து 298 பேர் அரசு மருத்துவமனை, கோவிட்-19 கவனிப்பு மையங்களில் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இதில் 129 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 85 பேர் கரோனா உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 14 ஆயிரத்து 648 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 48 பேர் கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.