கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே, கூட்டுறவுத் துறை உயர் அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
'கரோனா காலத்தில் மக்களை காத்தது தமிழ்நாடு அரசுதான்!' - கன்னியாகுமரி மாவட்ட செய்திகள்
கன்னியாகுமரி: வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் கரோனா காலத்தில் 98 விழுக்காடு மக்களுக்கு 1,000 ரூபாய், அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட நியாயவிலைக் கடை பொருள்களை இலவசமாக வழங்கி மக்களைப் பாதுகாத்தது தமிழ்நாடு அரசுதான் எனத் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
கரோனா காலத்தில் மக்களை பாதுகாத்தது தமிழ்நாடு அரசுதான் -அமைச்சர் செல்லூர் ராஜு
இந்தக் கூட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் 15 ஆயிரத்து 39 பயனாளிகளுக்கு 101 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செல்லூர் ராஜு வழங்கினார்.
பின்னர் விழாவில் அவர் பேசுகையில், "இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் கரோனா காலத்தில் 1000 ரூபாய், 98 விழுக்காடு மக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட நியாயவிலைக் கடை பொருள்களை இலவசமாக வழங்கி மக்களைப் பாதுகாத்தது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசுதான்" என்றார்.