தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மருத்துவமனையில் ஐசியூவில் குளிர்சாதனம் பழுது - ஜன்னல்கள் திறந்து சிகிச்சை செய்யும் அவலம்! - குழந்தைகள் பிரிவு

கன்னியாகுமரி: நாகர்கோவில் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் குளிர்சாதன இயந்திரம் இயங்காமல் ஜன்னல்கள் திறந்து வைத்து சிகிச்சை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் ஆதி திராவிடர் முன்னேற்ற இயக்கத்தினர் மனு அளித்துள்ளனர்.

government hospital

By

Published : Sep 24, 2019, 7:59 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலிருந்து நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் 20ஆம் தேதியன்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை பிரிவில் சுமார் பத்து குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்போது அங்குள்ள ஐசியூ பிரிவில் குளிர்சாதன இயந்திரம் இயங்காமல்இருந்ததாகவும், இதைத்தொடர்ந்து ஜன்னல்கள் திறந்து வைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே இந்த செயல்களை செய்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், மருத்துவமனையில் எங்கும் சுத்தம் செய்யப்படாமல், துர்நாற்றம் வீசுவதாகவும் ஆதி திராவிடர் முன்னேற்றக் கழகத்தினர் புகார் அளித்துள்ளனர்.

நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

மேலும் இதே போன்று ஒரு வருடத்திற்கு முன்பாக தீவிர சிகிச்சைப் பிரிவில் குளிர்சாதனம் இயங்காமல் மின்விசிறி இயக்கப்பட்டு இருந்ததால் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க கோரியும் ஆதி திராவிடர் முன்னேற்றக் கழகத்தினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

இதையும் படிங்க:'விளைநிலங்களை ஏமாற்றி பெற்ற ஒஎன்ஜிசி'- மீட்டுத் தரக்கோரி விவசாயிகள் மனு!

ABOUT THE AUTHOR

...view details