தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளங்கலை படிக்கும் மாணவர்கள் அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்! - கன்னியாகுமரி மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கிவரும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளங்கலை படிக்கும் மாணவர்கள் அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே தகவல் வெளியிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்

By

Published : Sep 18, 2020, 7:34 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "குமரி மாவட்டத்தில் நடப்புக் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளங்கலை படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபின மாணவர்கள் தமிழ்நாடு அரசின் கல்வி உதவித்தொகை பெற தாங்கள் படிக்கும் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் பெற்று பூர்த்திசெய்து உரிய சான்றுகளுடன் சமர்ப்பிக்கவும்.

முதுகலை, பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் வருமானம் ஆண்டுக்கு 2 லட்சத்திற்கு மேல் இருக்கக் கூடாது. மேலும் தகவல்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலப்பிரிவு அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details