தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகர்கோவிலில் நடைபெற்ற நகைத் தொழிலாளர்களுக்கான விளக்கக் கூட்டம்! - gold association meeting

கன்னியாகுமரி: குமரி மாவட்ட நகைத் தொழிலாளர் பேரவை சார்பில் சிறுநகை தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் உதவித் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு விளக்கக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.

குமரி மாவட்ட நகை தொழிலாளர் பேரவை  சிறுநகை தொழிலாளர்கள்  gold association meeting  நகைத் தொழிலாளர்கள் கூட்டம்
நகைத் தொழிலாளர்கள் கூட்டம்

By

Published : Feb 19, 2020, 10:08 AM IST

குமரி மாவட்டம் நாகர்கோவிலில், குமரி மாவட்ட நகைத் தொழிலாளர் பேரவை சார்பில் மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர வளர்ச்சி நிலையம் மற்றும் கிளஸ்டர் மேம்பாட்டுத் திட்டத்தில் நகைத் தொழில் அபிவிருத்தி குறித்த விளக்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான சிறு மற்றும் குறு தங்க நகை உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் இத்திட்டம் குறித்து தங்க நகை உற்பத்தியாளர் ஒருவர் பேசிய போது, 'சிறுநகை உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு 90 விழுக்காடு வரை மானியம் வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் ரூ. 5 கோடி முதல் ரூ. 20 கோடி வரை பெற்றுக் கொள்ளலாம். இதனைப் பயன்படுத்தி தங்க நகை உற்பத்தியாளர்கள் பொதுப் பயன்பாட்டு மையம் மூலம் தங்க நகை உற்பத்தி இயங்குதளங்களை வாங்கவேண்டும்.

இதன் மூலம் சிறு நகை உற்பத்தியாளர்கள், இயந்திரத்தைப் பயன்படுத்தி குறைந்த அளவு சேதாரத்தில் நவீன வகை நகைகளை உற்பத்தி செய்ய முடியும்.

நகைத் தொழிலாளர்கள் கூட்டம்

இதனைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தரம் வாய்ந்த நகை வகைகளை உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலம் தங்க நகைத் தொழிலில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இன்றைய சூழலில் இந்தியாவிற்கு 200 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் வருகிறது. 500 கோடி மதிப்புள்ள தங்கம் நகைகளாக உருமாறி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது' இவ்வாறு தெரிவித்தார்.

இதையும் படிங்க:'திருச்சியிலிருந்து சவூதிக்கு நேரடி விமான சேவை வேண்டும்' - கார்த்தி சிதம்பரம் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details