கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ். இவர் கோட்டார் காவல் நிலையம் அருகில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கயிறு சாக்கு விற்பனை செய்யும் குடோன் நடத்திவருகிறார். இவர் சமீபத்தில் குடோனின் ஒரு பகுதியை அலுவலகமாக மாற்றினார். இங்கு சில சாக்கு கட்டுகளும், கணினி, ஆவணங்கள் உள்ளிட்ட அலுவலகப் பொருள்களும் இருந்தன.
இந்நிலையில் இன்று (ஜூன் 24) காலை இந்தக் குடோனிலிருந்து கடுமையான புகை வர ஆரம்பித்ததுள்ளது. இதனையடுத்து இது குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் குடோனில் ஏற்பட்டிருந்த தீயைப் போராடி அணைத்தனர்.