தமிழ்நாடு அரசின் வீர தீர விருது பெற, வீர தீர செயல் புரிந்த பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு சமூக நலம், சத்துணவுத் திட்டத் துறை மூலம் பல்வேறு பிரிவுகளின் கீழ் வீர தீர செயல் புரிந்து வரும் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் விதமாக அதற்கான மாநில விருது ஒன்றை அறிவித்து கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.
வீர தீர சாகசம் செய்யும் பெண் குழந்தைகளுக்கான விருதுக்கு விண்ணப்பிப்பது எப்படி? - பெண் குழந்தைகள்
கன்னியாகுமரி: தமிழ்நாடு அரசால் தேசிய பெண் குழந்தைகள் தினத்தன்று வழங்கப்படும் வீர தீர விருதுகள் பெற, வீர சாகச செயல்கள் புரிந்த பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி ஆண்டு தோறும் வீர தீர சேவை புரிந்து வரும் சிறந்த குழந்தை ஒருவருக்கு தேசிய பெண் குழந்தை தினத்தில் பாராட்டு பத்திரமும், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. எனவே, வருகின்ற ஜனவரி 2020ல் தேசிய பெண் குழந்தை தினத்தில் மாநில விருது வழங்கிட 18 வயதிற்குட்பட்ட உரிய தகுதியான பெண் குழந்தைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், காவல்துறை, தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் வாயிலாக உரிய முன்மொழிவுகள் உடன் மாவட்ட சமூக நல அலுவலரிடம் 31.10.2019க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.