தமிழகத்தின் தென்கோடியில் அமைந்துள்ள சிறிய மாவட்டம் கன்னியாகுமரி. இந்த மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 1,672 சதுர கிலோ மீட்டர். மக்கள் தொகை 18,70,374. இதில் நகர்ப்புற பகுதிகளில் வாழும் மக்களின் எண்ணிக்கை 15,39,802. கிராமப்புற பகுதிகளில் வாழும் மக்களின் எண்ணிக்கை 3,30,572. இங்கு மக்களின் அடர்த்தி ஒரு கிலோ மீட்டருக்கு 1,119 பேர் என்ற கணக்கில் உள்ளது.
குமரி மாவட்டத்தில் தொடக்கக்காலத்தில் திறந்தவெளி கழிப்பறை பயன்பாடு அதிகளவில் இருந்தது. பின்னர் மத்திய அரசு கொண்டுவந்த தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனைவருக்கும் கழிப்பறை கட்டிக் கொடுக்க வழிவகை செய்யப்பட்டது. மேலும் பொது இடங்களிலும் ஏராளமான கழிப்பறைகள் தேவையான அளவு கட்டிக் கொடுக்கப்பட்டன. இதனால் குமரி மாவட்டம் திறந்தவெளி கழிப்பறை இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
கழிப்பறை தினமான இன்றும் பராமரிப்பின்றி கிடக்கும் கழிவறைகள்! எனினும் குமரி மாவட்டத்தில் தற்போது நிலவும் கரோனா காலக்கட்டத்தில், கழிவறைகள் சுத்தம் செய்யப்படாமலும், முறையான வகையில் பராமரிக்கப்படாமலும் உள்ளன. அதே போல் பொது இடங்கள், சுற்றுலாத் தலங்களில் வைக்கப்பட்டுள்ள கழிவறைகள் திறக்கப்படாமல் மூடியே கிடக்கின்றன. இதனால் அங்கு வரும் பயணிகள் கழிவறை வசதி இல்லாமல் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்த சுழலில் குமரி மாவட்டம் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி, திறந்தவெளி கழிப்பறைகள் நிறைந்த மாவட்டமாக ஆகிடுமோ என சூழலியலாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே, உலக கழப்பறை தினமான இன்று அரசு இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: மதுரையில் கி.பி.15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரைவீரன் நடுகல் கண்டுபிடிப்பு