தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாயில்லா ஜீவன்களுக்கு உணவு வழங்கும் ஜீவ காருண்யா விலங்குகள் அமைப்பு - Jiva Karunya Animals Organization

கன்னியாகுமரி: கரோனா வைரஸ் தடுப்பு 144 தடை உத்தரவு காரணமாக குமரி மாவட்ட நகரப்பகுதிகளில் தெரு நாய்கள் உள்ளிட்ட வாயில்லா உயிர்கள் பல நாள்களாக உணவின்றி தவிப்பதால் ஜீவ காருண்யா விலங்குகள் அமைப்பு உணவு வழங்கிவருகிறது.

ஜீவ காருண்யா விலங்குகள் அமைப்பு
ஜீவ காருண்யா விலங்குகள் அமைப்பு

By

Published : Apr 9, 2020, 8:55 AM IST

குமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதுமுள்ள ஓட்டல்கள், உணவுக்கூடங்கள் செயல்படவில்லை.

இதனால், தெருக்களில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் தெரு நாய் உள்ளிட்ட வாய் இல்லா ஜீவன்கள் உணவின்றி பசியால் தவித்து வருகின்றன.

இதனைத் தொடர்ந்து ஜீவ காருண்யா விலங்குகள் அமைப்பு சார்பில் தினமும் உணவு சமைத்து வேன் மூலம் எடுத்து வந்து நகரப்பகுதியிலுள்ள நாய்களுக்கு உணவளித்து வருகின்றனர்.

மேலும் ஊனமுற்ற நாய்கள், சாலை விபத்தில் அடிபட்ட நாய்களை இந்த அமைப்பு நடத்தும் விலங்குகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து அவற்றை மீண்டும் அதே பகுதியில் கொண்டுவிடும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: "கரோனாவை நினைத்து யாரும் பீதியடைய வேண்டாம்" பேராசிரியர் டாக்டர் ஏ.ஜி.சாந்தி!

ABOUT THE AUTHOR

...view details