மண்ணுரிமை காப்போம் என்ற பயணம் தொடர்பான ஆலோசனை கூட்டம் சுவாமிதோப்பில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் கவுதமன் பேசுகையில், “மத்திய அரசு கொண்டு வரும் சட்டத் திருத்த மசோதாக்களில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு திராவிட கட்சிகளும் இரட்டை வேடம் போடுகின்றன. தமிழ்நாடு அரசால் இரண்டு முறை நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், டெல்லி என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை.
“சாகர்மாலா திட்டம் மீனவர்களை சாகடித்து மாலை போடும் திட்டம்”
கன்னியாகுமரி: சாகர்மாலா திட்டம் என்பது மீனவர்களை சாகடித்து மாலை போடும் திட்டம், என தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் கவுதமன் கூறியுள்ளார்.
சாதி வன்மத்தை ஒழித்த அய்யா வைகுண்டரின் வழிபாட்டுத் தலங்களை இந்து அறநிலையத் துறை அபகரிக்க முயல்வதை அனுமதிக்க முடியாது. தமிழ் புலவர் என்ற ஒரே காரணத்தால் மத்திய மாநில அரசுகள் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்தை நிறுத்துகிறது. நான்கு வழிச்சாலை என்ற பெயரில் குளங்கள், மரங்கள் அழிக்கப்பட்டு ஆளும் கட்சியினரும் எதிர்கட்சியினரும் கூட்டு சேர்ந்து கொள்ளை அடித்து வருகின்றனர்.
முத்தலாக் மசோதாவில் எங்களுக்கு ஈடுபாடில்லை. இம்மசோதா சிறுபான்மையினரை ஒடுக்குவதாகவே உள்ளது. மீனவர்களை கொன்று மாலையிடும் திட்டமே சாகர்மாலா திட்டம். இத்திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என கூறினார்.