கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் வெட்டுமணி சாஸ்தா கோயில் அருகே மார்த்தாண்டம் உதவி காவல் ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு ஆட்டோவில் சந்தேகப்படும்படியாக இரண்டு பேர் நின்றனர்.
ஆட்டோவில் கஞ்சா வைத்திருந்த இருவர் கைது - ஆட்டோவில் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா பறிமுதல்
கன்னியாகுமரி: மார்த்தாண்டம் அருகே ஆட்டோவில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த இரண்டரை கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், இதுதொடர்பாக இருவரை கைது செய்தனர்.
Ganja
அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், கழுவந்திட்டை பகுதியை சேர்ந்த பிஜு(39), மது(51) என்பது தெரியவந்தது. தொடர்ந்து ஆட்டோவை காவல்துறையினர் பரிசோதனை செய்ததில், அதில் விற்பனைக்காக இரண்டரை கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.