தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 210 கிலோ கஞ்சா பறிமுதல் - Ganja seized

பூட்டியிருந்த வீட்டுக்குள் மூட்டை மூட்டையாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 210 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

கஞ்சா
கஞ்சா

By

Published : Jun 20, 2021, 12:50 PM IST

கன்னியாகுமரி:அருமனை அருகேயுள்ள பந்நிப்பாலம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் கேரளாவைச் சேர்ந்த சிலர் தங்கியிருந்தனர். அவர்கள் அந்த வீட்டு உரிமையாளரிடம் மீன் ஏற்றுமதி தொழிலில் ஈடுபடுவதாகக் கூறியுள்ளனர்.

வாடகைக்கு தங்குவதாகக் கூறிய நபர்களில் ஒருவர் கூட அங்கு தங்காததால், நாள்கணக்கில் அந்த வீடு பூட்டியே வைக்கப்பட்டிருந்தது. இதனால் வீட்டின் உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

நாளடைவில் சந்தேகம் வலுக்கவே காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். எப்போதும் அந்த வீடு பூட்டியிருந்ததால், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சோதனையில் ஈடுபட்டபோது அங்கு கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

கேரள கும்பலுக்கு வலைவீச்சு

தொடர்ந்து, வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 210 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அகமது அனஸ் என்பவரது தலைமையிலான கேரள கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

அகமது அனஸ்

இதையும் படிங்க: கடலுக்கு அடியில் மர்ம தீவு... ஆச்சரியத்தில் நிபுணர்கள்!

ABOUT THE AUTHOR

...view details