கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் உட்பட பல்வேறு சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது.
நாகர்கோவிலில் பட்டப்பகலில் இளைஞர் மீது தாக்குதல்- பரவும் சிசிடிவி காட்சிகள் - நாகர்கோவில்
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் 5 பேர் கொண்ட கும்பல் ஒருவரை தாக்கி இழுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் நாகர்கோவில் பொதுப்பணித்துறை அலுவலகம் அமைந்துள்ள சாலையில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை 3 இரு சக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்த வாலிபரை அருகில் உள்ள கடைக்குள் கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த கட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.