தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீனவர் மீது கும்பல் தாக்குதல்: மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை - கன்னியாகுமரி மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரியில் மீனவர் மீது கும்பல் தாக்குதல் நடத்தியதால் நடவடிக்கை எடுக்க கோரி அவரது மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

மீனவரின் மனைவி கோரிக்கை
மீனவரின் மனைவி கோரிக்கை

By

Published : Nov 20, 2022, 2:00 PM IST

கன்னியாகுமரி: கடியப்பட்டணம் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவரது மனைவி சைனி. இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். கடந்த 15 தினங்களுக்கு முன்னர் சுரேஷின் மனைவி சைனி தனது மூத்த மகளை கல்லூரியில் கொண்டு விட சென்றார்.

அப்போது நான்கு பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து சுரேஷ் குமாரையும் அவரது இரு மகள்களையும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சுரேஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மீனவரின் மனைவி கோரிக்கை

இது குறித்து காவல் நிலையத்தில் அவரது மனைவி புகார் அளித்துள்ளார். இந்நிலையில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் போலீசார் 15 தினங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். புகாரை வாபஸ் வாங்க மணவாளக்குறிச்சி போலீசார் வற்புறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னையில் இருந்து சேலம், கோவை வழியாக சபரிமலை சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details