தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மரணத்திலும் இணை பிரியாத தோழர்கள் - kanniyakumari district news

கன்னியாகுமரி: தோவாளை பகுதியில் உடல்நலம் சரியில்லாமல் நண்பன் உயிரிழந்ததால் மனமுடைந்த சக நண்பன், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

சக நண்பனும் விஷம் குடித்து தற்கொலை
சக நண்பனும் விஷம் குடித்து தற்கொலை

By

Published : Oct 17, 2020, 7:31 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வடக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பரமேஷ் (30). இவரது நண்பர் விஜய் (31). இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்து பூக்கடையில் வேலை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், உடல் நலம் சரியில்லாமல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பரமேஷ் மரணமடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக நண்பன் விஜய் சோகத்துடன் இருந்துள்ளார். இதனிடையே நேற்று (அக.16) விஜயும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதைக் கண்ட உறவினர்கள், விஜய்யை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று (அக்.17) பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: முன்பகை காரணமாக நண்பர் மீது தாக்குதல்; சிசிடிவி காட்சி வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details