குமரி மாவட்டத்தில் உள்ள மீன்பிடி துறைமுக கட்டுமான பணிகளை முறையாக அமைக்கவில்லை என மீனவ மக்கள் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு தேங்காய்பட்டணம் பகுதியில் இரண்டு படகுகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரு மீனவர்கள் கடலில் மாயமாகினர். இதில் ஒரு மீனவரின் உடல் மீட்க்கப்பட்ட நிலையில், ஒருவரின் உடல் கிடைக்கவில்லை.
மீன்பிடி துறைமுகத்தில் அடிக்கடி ஏற்படும் படகு விபத்து
கன்னியாகுமரி: தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் அடிக்கடி படகு விபத்து ஏற்படுகிறது. அதேபோல் இன்று ( ஜூலை 31) படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு எஞ்சின் சேதமடைந்ததில் நான்கு லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த துறைமுக கட்டுமான பணிகள் சரியில்லாத காரணத்தால் இந்த விபத்துகள் ஏற்படுவதாக கூறி மீனவ மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இன்று (ஜூலை 31) வள்ளவிளை மீனவ கிராமத்தை சேர்ந்த ஸ்டெல்லஸ் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகு கடலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படகில் இருந்த நான்கு மீனவர்கள் உயிர் தப்பினர். எனினும் இந்த படகும், படகில் இருந்த இரு எஞ்சின்களும் அலையில் சிக்கி சேதமடைந்துள்ளது. சேதமான படகு, இரு இஞ்சின்களுக்கும் நான்கு லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.