கன்னியாகுமரி, புனித அந்தோணியார் மேல் நிலைப்பள்ளியில், இன்று சுழற்சங்கம் சார்பில் குழந்தைகளுக்கான இலவச இருதயநோய் கண்டறியும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
கன்னியாகுமரியில் சுழற்சங்கம் சார்பில் மருத்துவ முகாம் - 150 குழந்தைகளில் 24 பேர்களுக்கு இருதய நோய் - இருதய நோய் குழந்தைகள்
கன்னியகுமாரி: சுழற்சங்கம் சார்பில் நடைபெற்ற, குழந்தைகளுக்கான இருதய நோய் கண்டறியும் முகாமில் 150 குழந்தைகளில் 24 குழந்தைகளுக்கு இருதய நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதில் பிறந்த குழந்தை முதல் 16வயதுக்குட்பட்ட 150 குழந்தைகள் கலந்துகொண்டனர். இவர்களை ஆய்வு செய்த மருத்துவர்கள் அதிர்ச்சித் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளனர். இதுபற்றி மருத்துவர்கள் கூறுகையில், இந்த முகாமில் பங்கேற்ற 150 குழந்தைகளில் 24 குழந்தைகளுக்கு இருதய நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவை எளிதில் சரி செய்யக்கூடியவை என்றாலும் முன்கூட்டியே இதை அறிவது அவசியம். மேலும், பாதிக்கப்பட்ட 24 குழந்தைகளுக்கும் வரும் 18ஆம் தேதி சென்னை அப்பலோ மருத்துவமனையில் இலவசமாக இருதய சிகிக்சை அளிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு மருத்துவர்கள் கூறினார்கள்.