அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.
டிசம்பர் வரை ஏழைகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக வழங்க வேண்டும் - இந்திய ஜனநாயக மாதர் சங்கம்
குமரி: தமிழ்நாடு அரசு வரும் டிசம்பர் மாதம் வரை ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டிசம்பர் வரை ஏழைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்க வேண்டும் - இந்திய ஜனநாயக மாதர் சங்கம்
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது, 'கரோனாவால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பல்வேறு ஏழை குடும்பங்கள் உணவுக்கே வழியில்லாமல் வறுமையால் வாடி வருகின்றனர். எனவே, தமிழ்நாடு அரசு டிசம்பர் மாதம் வரை அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்க வேண்டும்.
மேலும், மாதம்தோறும் கோதுமை, பாமாயில், மண்ணெண்ணெய் போன்றப் பொருட்கள் தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அவர்கள் கூறினர்.