நேற்று(13.11.2019) காலை வடசேரி எஸ்.எம்.ஆர்.வி பள்ளி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் துறையினர் நடவடிக்கையில் இறங்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த நான்கு பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து நான்கு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பானை ரவி, டேனியல் மற்றும் காமராஜபுரத்தைச் சேர்ந்த கண்ணன், ஜெகன் என்பது தெரியவந்தது. "கஞ்சாவை உசிலம்பட்டியில்(மதுரை) இருந்து அதிக அளவில் வாங்கி வந்து, அவற்றை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.