தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு பள்ளியில் முன்னாள் தலைமை ஆசிரியர் உள்ளிருப்பு போராட்டம்! - kanyakumari district latest news

இரவிபுதூர் அரசு பள்ளியில் முன்னாள் தலைமை ஆசிரியர் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Raviputhur government school
குமரி: இரவிபுதூர் அரசு பள்ளியில் முன்னாள் தலைமை ஆசிரியர் உள்ளிருப்பு போராட்டம்

By

Published : Dec 7, 2020, 7:47 PM IST

கன்னியாகுமரி:குமரி மாவட்டம் மயிலாடி அடுத்த இரவிபுதூர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர் ராஜன். இவர், சமீபத்தில் அந்தப் பள்ளியிலிருந்து மாற்றப்பட்டு வேறு மாவட்டத்தில் பணி அமர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ராஜன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்து நீதிமன்ற மூலம் அதே பள்ளியில் அதே தலைமையாசிரியர் தகுதியோடு பணியாற்ற அனுமதி பெற்றார். இந்நிலையில், இரவிபுதூர் பள்ளியில் பொறுப்பேற்க வந்த அவருக்கு ஆசிரியர்கள் தரப்பில் ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதுகுறித்து அவர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை தொடர்பு கொண்டபோது அவரும் உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், இரவிபுதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று ராஜன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை அஞ்சுகிராமம் காவல் நிலைய காவலர்கள் சமாதானம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை நேரில் சென்று சந்திக்கும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:இளைஞரின் நிலத்திற்கு பணம் தராமல் ஏமாற்றும் அலுவலர்கள்

ABOUT THE AUTHOR

...view details