ஐரோப்பியா, சைபீரியா, ரஷ்யா, மங்கோலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம்வரை கடும் குளிர் ஏற்படும். இதனால் பறவைகள் அங்கு வாழ முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் பறவைகள் இந்தியாவில் உள்ள முக்கிய இடங்களுக்கு இடம்பெயர்கின்றன. தென்மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் அதிகமான வெளிநாட்டு பறவைகள் வந்து முகாமிடுகின்றன.
அந்த வகையில் வெளிநாடுகளில் உள்ள பிளம்பிங்கோ, ஊசிவால் வாத்து, உள்ளான் வகைகள் , சோவலர் வாத்து இனங்கள், ரெட் சேன், கிரீன் சேன் உள்ளிட்ட பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகளும், இந்தியாவின் வட மாநிலங்களில் உள்ள கூழை கடா, பல்வேறு நாரை, கொக்கு இனங்கள் உள்ளிட்ட உள்நாட்டு பறவைகளும் நாகர்கோவில் அருகே உள்ள மணக்குடி, சுசீந்தரம், தேரூர், சாமிதோப்பு, புத்தளம் ஆகிய பகுதிகளில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் முகாமிட்டுள்ளன.